ரோஜாவுக்கு பேய் ஓட்டிய சிரஞ்சீவி கட்சியினர்

கடந்த மாதம் திருப்பதியில் பிரஜா ராஜ்யம் கட்சியை பதச்துலட்சம் பேரைத் திரட்டி தொடங்கினார் சிரஞ்சீவி. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர், இவரது கட்சியில் இணைந்து வருகின்றனர்.
பல்வேறு விமர்சனங்களை சிரஞ்சீவி சந்தித்து வந்தாலும் அவருக்கு மக்களிடையே பெரும் விளம்பரமும், ஆதரவும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியும், நடிகையுமான ரோஜா கடந்த சில தினங்களாக சிரஞ்சீவியை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.
இதனால் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சித் தொண்டர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
தங்கள் தலைவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஒரு நடிகை இப்படியெல்லாம் விமர்சித்துப் பேசுவதா என கொதித்துப்போன அவர்கள் ஒரு நூதனப் போராட்டத்தில் இறங்கி ரோஜாவுக்கு பீதியூட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள கோதாவரி சுரங்கம் அருகே நேற்று நூற்றுக்கணக்கான பிரஜா ராஜ்ய கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பல மாவட்ட பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
போராட்டம் இதுதான்: நடிகை ரோஜாவுக்கு, பேய் பிடித்துவிட்டதாகவும், அதனால்தான் கட்டுப்பாடில்லாமல் தாறுமாராகப் பேசி வருகிறார் என்றும் கூறி எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களுடன் மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர்.
இந்த போராட்டம் அந்தப் பகுதி மக்களை பரபரப்பாக்கியது. பில்லி சூனியம் செய்கிறார்களோ என்று பார்க்க ஏராளமானோர் திரண்டுவிட்டனர்.
இதுகுறித்து நடிகை ரோஜாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே பில்லி, சூனியம், மந்திரவாதிகளை அதிகம் நம்பும் ரோஜா, இதில் கலக்கமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications