தாய் கண் முன் வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை சாவு
நெல்லை: தாய் கண் முன்னே வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
பாளை அருகே உள்ள விஎம் சத்திரம் லட்சுமி நகர் மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பாஸ்கர்-வனிதா தம்பதி. இவர்களது மகள் கமலி (3), மகன் கோபிநாத் என்ற ஒன்றரை வயது குழந்தை.
கமலி பாளையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி வேனில் சென்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கமலியை அழைத்து செல்வதற்காக பள்ளி வேன் வீட்டு முன் வந்து நின்றது.
வனிதா மகளை அழைத்துக் கொண்டு வந்து வேனில் ஏற்றி விட்டார். அப்போது கைக்குழந்தை கோபிநாத் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றுவிட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. பின்னர் வேன் அங்கிருந்து புறப்பட்டது.
அப்போது வண்டிக்கு அடியில் உட்கார்ந்து இருந்த குழந்தை கோபிநாத் மீது வேன் ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த அதிர்ச்சியடைந்த வனிதா, கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications