காடு வெட்டி குரு வழக்கு: அக்.7க்கு ஒத்திவைப்பு
அரியலூர்: பாமக பொருளாளரும், வன்னியர் சங்க தலைவருமான காடு வெட்டி குரு மீதான வழக்கை வரும் அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக பிரமுகர் குணசேகரனை தாக்கியது, பாமக முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளர் செல்வி செல்வம் வீட்டில் குண்டு வீசியது, அரியலூரில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் எம்எல்ஏ சிவசங்கரன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவற்றிக்காக காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தற்போது காடு வெட்டி குரு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று அரியலூர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திருச்சி மத்திய சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரஸிங் மூலம் குரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைக்கு பிறகு, வழக்கை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட் விஜயராணி.












Click it and Unblock the Notifications