நோட்டுக்கு ஓட்டு: புதிய திருப்பம்; காங்- சமாஜ்வாடி 'லடாய்'
டெல்லி: மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பிக்களுக்கு லஞ்சம் தரப்பட்ட விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஹஸ்மத் அலி என்பவர் தன்னிடம் ரூ. 5 கோடி கேட்டு மிரட்டுவதாகவும், அவரை பிடித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உதவ மறுப்பதாகவும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர் சி்ங் புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
இதனால் காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சிகள் இடையே புதிய மோதல் ஏற்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பிக்களுக்கு லஞ்சம் தரப்பட்டது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட கிஷோர் சந்திரதேவ் விசாரணைக் கமிஷனின் காலம் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட லஞ்சம் அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரை கிஷோர் சந்திரதேவ் குழு விசாரித்து வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் வீட்டுக்கு கார் ஓட்டிச் சென்ற டிரைவரையும், மஞ்சள் டி சர்ட் அணிந்த நபரையும் அழைத்து விசாரணைக் குழு முன்பாக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த இருவரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விசாரணைக் குழு கை விரித்துவிட்டது.
இந்நிலையில் ஹஸ்மத் அலி என்பவர் தான் லஞ்சம் வாங்குவதற்காக 3 பாஜக எம்பிக்களையும் அமர்சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற காரின் டிரைவர் என்றும், அவரை விசாரணைக் குழு முன்பாக அழைத்து வருவதாகவும் சோகைல் இந்துஸ்தானி என்பவர் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமர்சிங், ஹஸ்மத் அலி என்பவர் பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆள். அவர் என்னிடம் ஐந்து கோடி ரூபாய் அளிக்கும்படி கேட்டார். அவ்வாறு அளித்து விட்டால் அதற்கு தகுந்த மாதிரி விசாரணைக் குழு முன்பாக சாட்சியம் அளிக்கிறேன் என்று பிளாக் மெயில் செய்கிறார்.
அவரைக் கைது செய்யுமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் சொன்னேன். ஆனால் அவரோ, அப்படியெல்லாம் நான் போலீஸை அனுப்ப முடியாது. நீங்கள் போலீசில் போய் புகார் கொடுங்கள் என்று கூறிவிட்டார். ஆட்சியைக் காப்பாற்ற பாடுபட்ட அமர்சிங்குக்கே இந்த கதியா. இது குறித்து அடுத்த காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டுக் கூட்டத்தில் பிரச்சனை எழுப்புவேன்.
ஹஸ்மத் அலிக்கும் பாஜகவின் சுதீந்திர குல்கர்னிக்கு இடையிலான தொடர்பை விளக்கும் சிடியும் என்னிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் என்னை பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டினால் இந்த சிடியை வெளியிட்டுவிடுவேன் என்றார் அமர்சிங்.
அமர்சி்ங்கின் இந்த கடுப்பான பேட்டியைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு வந்த போலீஸார் ஹஸ்மத் அலியை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை போலீசார் கொண்டு சென்றபோது, தான் கடத்தப்படுவதாக குரல் கொடுத்தவாரே சென்றார் அலி.
இதற்கிடையில் விசாரணைக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் 6ம் தேதி கூடவுள்ள நிலையில், அன்றைய கூட்டத்தில் இறுதி அறிக்கையை தயார் செய்துவிடப் போவதாக சந்திரதேவ் கூறியுள்ளார்.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை நேற்று சந்தித்த சந்திரதேவ், விசாரணைக் குழுவின் காலக்கெடுவை அடுத்த மாதம் 20ம் தேதி வரை நீட்டித்து ஒப்புதல் பெற்றுக் கொண்டார். எனவே, அடுத்த மாதம் 20ம் தேதி வாக்கில் இறுதி அறிக்கை சமர்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications