குழந்தைகளைக் குறி வைக்கும் கொலைகார கொசு கியூலெக்ஸ்!

க்யூலெக்ஸ் என்பது ஒரு வகை கொசுவின் பெயர். பெயர்தான் நன்றாக இருக்கிறதே தவிர இந்த கொசு பரப்பும் வைரஸ், உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு கொடூரமானது. இந்த கொசுவின் மூலம் பரவும் வைரஸால், ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் செயலிழந்து போய் உயிரே போய் விடும்.
கியூலெக்ஸ் கொசு, வெஸ்ட் நைல் வைரஸ், பிலாரியஸிஸ், ஜப்பானிஸ் என்செபலிடிஸ், செயின்ட் லூயிஸ் என்செபலிடிஸ், ஏவியான் மலேரியா ஆகிய வைரஸ்களை பரப்புகிறது.
நன்கு வளர்ந்த கியூலெக்ஸ் கொசுவின் சைஸ், 4 முதல் 10மில்லி மீட்டராகும். தண்ணீரில்தான் இந்த கொசுக்கள் அதிகம் காணப்படும். ஒரே நாளில் வளர்ந்து விடும் இந்தக் கொசு படு வேகமாக வைரஸ்களைப் பரப்புவதில் கில்லாடியாம்.
கியூலெக்ஸ் கொசுக்களில் பல வகைகள் உள்ளன. பனாமாவில் மட்டும் 88 வகை கியூலெக்ஸ் கொசுக்ள் உள்ளனவாம்.
இந்தக் கொசுவால் பரப்பப்படும் வைரஸால், மூளை பாதிக்கும். 15 வயதுக்கு உட்பட்டவர்களை மட்டுமே தாக்கும் தன்மை இந்த கொசுவுக்கு உண்டு.
கொசு கடித்தவுடன் அதன் மூலம் பரவும் வைரஸ் மூளையைத் தாக்குகிறதாம். முதலில் காய்ச்சலாக ஆரம்பிக்கும் இந்த நோய், சரியான உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால் நரம்பு மண்டலத்தையே பாதிக்க வைக்கும் அபாயமுள்ளது என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.
தற்போது, கியூலெக்ஸ் கொசுக்கள் மூலம் கடலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, பெரம்பலூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தமிழக அரசின் சுகாதாரத் துறையே அறிவித்துள்ளது.
இதைத் தடுப்பதற்காக மாவட்டம்தோறும் குழந்தைகளுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடப்படுகிறது.
முதல் கட்டமாக பெரம்பலூரில் மட்டும் 1.6 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களால் ஏற்கனவே கதி கலங்கிப் போன தமிழக மக்களை, கியூலெக்ஸ் பிடியிலிருந்து காப்பாற்ற தமிழக சுகாதாரத் துறை விரைந்து செயல்படுவது ஆறுதல் தருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications