தந்தையை வெட்டி கொலை மனநலம் குன்றிய மகன் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில், தந்தையை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகனை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வீகேபுதூர் அருகே உள்ள கோபாலபேரியை சேர்ந்தவர் அருளப்பன், விவசாயி. இவரது மகன் அந்தோணி என்ற ஆரோக்கியசாமி. மனநலம் பாதிக்ப்பட்டவர். அவரை வீட்டில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு அருளப்பன் அந்தோணியிடம் ஏதோ கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி, அரிவாளால் அருளப்பனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விகேபுதூர் போலீசார் விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் ஒளிந்து கொண்டிருந்த அந்தோணியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications