'நளினி விடுதலை'-சட்டத்தில் இடமில்லை: சுவாமி
சென்னை: நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதால் அவரை விடுதலை செய்ய சட்டத்தில் இடமில்லை. எனவே, நளினி விடுதலையாக வாய்ப்பில்லை என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நளினி விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த தவறான செய்திகள் வெளி வந்துள்ளன. நளினியை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. விடுதலை பற்றி முடிவு செய்யும் பொறுப்பு மாநில அரசிடமே உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நளினி விடுதலை தொடர்பாக சிறை ஆலோசனை குழு விதிமுறைகளை பின்பற்றவில்லை. இந்த குழுவின் உத்தரவை நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்ய வைத்து அதையே ஒரு காரணமாக காட்டி அவரை விடுதலை செய்யும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் நாடகமாடி உள்ளன.
இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு முதலில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பின்னர், தமிழக அரசின் நிலைப்பாடுதான் தங்களது நிலைப்பாடு என்று கூறியது. பின்னர் மீண்டும் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு எதையோ மறைக்க பார்க்கிறது.
இந்த பிரச்சனையில் நளினி மீண்டும் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அவரது தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து வாதாடுவேன். நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதால் அவரை விடுதலை செய்ய சட்டத்தில் இடமில்லை. எனவே, நளினி விடுதலையாக வாய்ப்பில்லை.
கோத்ரா சம்பவம் குறித்து நானாவதி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மையானது. கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குஜராத் அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. இதைபோல் திரிகோணமலையில் கோயில் பூசாரி கொல்லப்பட்டதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.
எனது கட்சியின் ஏர் உழவன் சின்னம் பறிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அந்த சின்னத்தை வேறு எந்த கட்சிக்கும் அளிக்க முடியாது என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications