For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைநழுவிய பிரதமரின் பிறந்த நாள் 'பரிசு'!

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரதமர் மன்மோகன் சிங் தனது 76வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த பிறந்த நாள் பரிசு (அணு ஒப்பந்தம்) கைநழுவி விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையில் நாட்டின் 14வது பிரதமராக உள்ளார் மன்மோகன் சிங். பஞ்சாப் மாநிலத்தில் 26.9.1932ல் பிறந்தார். இன்று தனது 76வது பிறந்த நாளை மன்மோகன் கொண்டாடுகிறார். ஆனால் அவர் மிகவும் ஆசையுடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்த பிறந்த நாள் பரிசான இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஏமாற்றமடைந்துள்ளார்.

ஐநா பொது சபை மாநாடு, அணு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன். செனட் கமிட்டி ஒப்புதலைத் தொடர்ந்து அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்ற விவாதத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிக் குழுவில் ஒருமித்த கருத்து ஏற்படாததன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்துவிடும் என்று இருநாட்டு தலைவர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

எனினும், இன்று ஒப்புதல் கிடைத்து விடும் என்று நம்பிக்கையுடன் இருந்த மன்மோகனுக்கு இது ஏமாற்றத்தை தந்துள்ளது. மறக்க முடியாத, உயர்வான பரிசாக தான் கருதிய பிறந்த நாள் பரிசு கைநழுவி போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X