ரைஸ் இந்தியா வருகிறார்-ஒப்பந்தம் கையெழுத்து?
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் அக்டோபர் 3ம் தேதி, ஒரு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் அவரும், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கடைசிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைப்பது மட்டுமே பாக்கியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தின்போதே ஒப்புதல் கிடைத்து விடும். இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் அதில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அது நடக்கவில்லை.
இந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி கான்டலீசா ரைஸ் இந்தியா வரவுள்ளார். ஒரு நாள் பயணமாக அவர் வருகிறார். இந்த பயணம் கடந்த ஒரு வருடமாகவே இழுபறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி ரைஸ் வருகிறார். அப்போது பிரணாப் முகர்ஜியுடன் அவர் இரு தரப்பு விவகாரங்கள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்.
இந்த பயணத்திற்கு முன்பாகவே அமெரிக்க நாடாளுமன்றம் அணு சக்தி ஒப்பந்த்திற்கு அனுமதி அளித்து விட்டால், அது தொடர்பான 123 ஒப்பந்தத்தில், பிரணாப் முகர்ஜியும், ரைஸும் கையெழுத்திடுவார்கள் எனத் தெரிகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நாளை ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது. அதேபோல திங்கள்கிழமையன்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி நான்கு நாள் பயணமாக நாளை அமெரிக்கா புறப்படுகிறார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அமெரிக்க தலைவர்களையும் அவர் சந்திக்கிறார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications