சம்பளம் இல்லை-அவதியில் ஆசிரியர்கள்
நெல்லை: நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அரசு பணி நியமன ஒப்புதல் கிடைக்காமல் சம்பளமும் இல்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக 17 இடைநிலை ஆசிரியர்கள் அவதிபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம், கீழப்பாவூர், மானூர், அம்பாசமுத்திரம், கடையம், தென்காசி, குருவிகுளம் உட்பட பல சரகங்களில் உள்ள டிடிடிஏ பள்ளிகளில் கடந்த 2001ம் ஆண்டு 42 பேர் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதில் 7 பேர் அரசு பணி கிடைத்து சென்றுவிட்டனர். மீதமுள்ள 35 பேருக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஒப்புதலுடன் சம்பளம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை கல்விதுறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவு, கல்விதுறை இயக்குனர் ஆகியோருக்கு பலமுறை மனு அனுப்பினர். ஆனால் அதற்கும் எந்த பதிலும் இல்லை. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையடுத்து ஆசிரியர்களில் 3 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இவர்கள் 3 பேருக்கு மட்டும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி நியமன ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 15 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றம் சென்று பணி நியமன ஒப்புதல் பெற்றனர்.
ஆனால் நீதிமன்றம் செல்லவும், கல்வித்துறை பார்மலி்ட்டி நடவடிக்கைகளுக்கு பணம் செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லாத 17 பேர் செய்வதறியாது உள்ளனர். அரசு முன்வந்து தங்களுக்கு பணி வழங்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications