கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் - பதட்டம்
நெல்லை: கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முடவன்குளம் கிராமத்தில் உள்ள உச்சினிமா காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு உரிமை உள்ளது. இவர்களுக்குள் கொடைவிழா நடத்துவதில் முன் விரோதம் இருந்து வந்ததால் தனித்தனியாக கொடை விழா நடத்துவர்.
கடந்த 22ம் தேதி ஒரு பிரிவினர் கொடை விழா நடத்தினர். மற்றொரு பிரிவினர் அக்டோபர் 13ல் நடத்த உள்ளனர். நேற்று முன்தினம் ஊரில் உள்ள சுடலையாண்டவர் கோயில் நள்ளிரவு பூஜை நடந்தது. இதில் வழிபட வந்த இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதில் பாரதி, சந்திரன், ஆறுமுகம், சங்கர், சுப்பையா, சிங்கரவேலு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து இரு பிரிவினரும் திசையன்விளை போலீசில் புகார் செய்தனர். இதில் பாரதிராஜா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோயில் தர்மகர்த்தா மைக்கெல், சிங்காரவேலு உள்பட 10 பேர் மீதும், சிங்காரவேலு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், பாரதிராஜா உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இரு தரப்பையும் சேர்ந்த சுரேஷ், பாக்கியம், முத்துபெருமாள், இசக்கி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications