வடிவேலு அலுவலகம் மீது தாக்குதல்: 13 தேமுதிகவினர் சரண்!
சென்னை: நடிகர் வடிவேலுவின் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தேமுதிகவைச் சேர்ந்த 13 பேரும் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலுவின் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் கார்களை நிறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கும் வடிவேலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடிவேலு தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அலுவலகமும் தாக்கப்பட்டது.
இதுகுறித்து வடிவேலுவின் உதவியாளர் மாரிமுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் புகார் பதிவு செய்து சென்னை சைதாப்பேட்டை 9வது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த்தின் மேலாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 13 தேமுதிகவினரும் கோர்ட்டுக்கு வரவில்லை. வடிவேலு நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து 13 தேமுதிகவினருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் இனி சம்மன் வந்தால் மட்டும் ஆஜரானால் போதும் என வடிவேலுவுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சதீஷ்குமார் உள்ளிட்ட 13 தேமுதிகவினரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி 13 பேரின் பிடிவாரண்ட்டையும் ரத்து செய்தார். விசாரணை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications