சாராய ஆலை-பொது மக்கள் கடும் எதிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே சாராய ஆலை கட்ட பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் சாராய ஆலை கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆலைக்குத் தேவையான இயந்திரங்களை ஏற்றி வந்த லாரிகளை கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, செக்கம்பேட்டை, உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த கந்தவர்வகோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெருமாள், ஆலை நிர்வாகிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதற்கு பொது மக்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, சாராய ஆலைக்கு தேவையான இயந்திரங்களை ஊருக்குள் விட மறுத்துவிட்டனர்.
இதனால் அந்த இயந்திரங்கள் மீண்டும் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன.












Click it and Unblock the Notifications