உத்தபுரத்தில் மீண்டும் மோதல்: தடியடி-கண்ணீர் புகை குண்டு வீச்சு
மதுரை: உத்தபுரத்தில் இன்று மீண்டும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மோதலில் ஈடுபட்ட மக்களை கலைத்தனர். இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வகுப்பினர் தங்களது பகுதியில் கட்டிய சுவரால் தலித் மக்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன் இந்த சுவருக்கு எதிராக வெடித்த போராட்டத்தையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் திருமண விழா தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. சுவர் இடிக்கப்பட்ட பகுதியில் தலித் மக்கள் பட்டாசுகள் வெடித்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக 128 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 30 பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications