மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரிக்கு அஞ்சலி

இன்று தேசப்பிதா மகாத்மாவின் 140வது பிறந்த நாளாகும். அதேபோல லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட தலைவர்கள், இரு மறைந்த தலைவர்களுக்கும் மலரஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, ராஜ்யசபா எதிர்க்கடட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, வயலார் ரவி, முரளி தியோரா, எம்.எஸ்.கில், பிருத்விராஜ் செளகான், நாராயணசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி மற்றும் சாஸ்திரியன் வாழ்க்கை வரலாறு குறித்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாக்கப்பட்ட நூல்களை லோக்சபா செயலகம் இந்த நிகழ்ச்சியின்போது வெளியிட்டது.
தமிழகத்தில் ...
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் தமிழகத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பஜன் பாடல்களும், பக்திப் பாடல்களும் இசைக்கப்பட்டன. அதை ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து கேட்டனர்.
மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனம் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
காந்தி சிலையிலிருந்து சைக்கிள் பேரணியை செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்தார்.
இந்திய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ரத்ததான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications