மீனவர்களை சுடும் கடற்படை: பொகல்லகாமாவிடம் பிரணாப் கண்டிப்பு
நியூயார்க்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில், புதிய திட்டத்தை உருவாக்க இந்தியாவும், இலங்கையும் முடிவு செய்துள்ளன.
நியூயார்க் வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமா சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குவது குறித்தும் அப்போது முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டாக வழிமுறைகளை உருவாக்க அப்போது தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்திய மீனவர்களை குறி வைத்து தாக்குவதை இலங்கை கடற்படை கைவிட வேண்டும் என பொகல்லகாமாவிடம் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
இலங்கை மாகாணத் தேர்தல் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
நியூயார்க் பயணத்தின் ஒரு கட்டமாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனையும், பிரணாப் முகர்ஜி சந்தித்தார். ஐநாவின் அமைதி காக்கும் பணிகளில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதற்காக பிரணாப் முகர்ஜியிடம், பான் கி மூன் பாராட்டு தெரிவித்தார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications