அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் ஒப்புதல்

மிகப் பெரிய அளவிலான மெஜாரிட்டியுடன் இந்த ஒப்பந்தத்ைத செனட் நிறைவேற்றியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு பாதகமான பல அம்சங்களைக் கொண்ட திருத்த மசோதாக்களையும் செனட் சபை நிராகரித்து விட்டது.
கடந்த 2005ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக உருவானது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை மிகக் கடுமையாக எதிர்த்த இடதுசாரிகள் அதை மத்திய அரசு ஏற்காததால், அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டன.
இப்படி இந்தியாவில் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்த இந்த ஒப்பந்தத்திற்கு இருந்து வந்த சர்வதேச அணு சக்தி ஏஜென்சி, என்.எஸ்.ஜி. தடைகள் சமீபத்தில் நீங்கின.
இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு ஒப்பந்தம் அனுப்பப்பட்டது. அங்கும் எதிர்ப்புகள் இருந்தன. இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு பிரதிநிதிகள் சபை ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் செனட் சபை இன்று காலை ஒப்பந்தத்திற்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஒப்புதல் வழங்கியது. ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.
மேலும், இரு ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் கொண்டு வந்த இந்தியாவுக்கு பாதகமான அம்சங்களைக் கொண்ட திருத்தங்களையும் செனட் சபை நிராகரித்து விட்டது.
ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இரு அவைகளின் ஒப்புதலையும் அணு சக்தி ஒப்பந்தம் பெற்று விட்டதால் அடுத்து அதிபர் புஷ்ஷின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அவர் ஒப்புதல்க ொடுத்த பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
விரைவில் இதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் இந்தியா வரவுள்ளார். அவரது வருகையின்போது அவரும், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் உடனடியாக அமெரிக்கா தனது அணு ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ளும் என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளாக அலைபாய்ந்து வந்த அணு சக்தி ஒப்பந்தம் தற்போதைய செனட் ஒப்புதல் மூலம் ஒரு வழியாக நடைமுறைக்கு வரும் கட்டத்தை எட்டி விட்டது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications