கர்நாடகத்திற்கு வாருங்கள் - டாடாவுக்கு எடியூரப்பா மீண்டும் அழைப்பு
பெங்களூர்: நானோ கார் தொழிற்சாலையை கர்நாடக மாநிலத்தில் அமைக்க முன்வர வேண்டும் என ரத்தன் டாடாவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
டாடா நிறுவனம் தனது நானோ தொழிற்சாலையை கர்நாடகத்தில் அமைக்க முன் வர வேண்டும் என ஏற்கனவே எடியூரப்பா அழைப்பு விடுத்திருந்தார். வட கர்நாடகத்தில் இதற்காக 1000 ஏக்கர் நிலத்தையும், தேவையான வசதிகளையும் டாடா மோட்டார்ஸுக்கு அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதாக ரத்தன் டாடா நேற்று முறைப்படி அறிவித்து விட்டார். இந்தப் பின்னணியில் தனது கோரிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளார் எடியூரப்பா.
இதற்கிடையே, முதல்வரின் செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நானோ ஆலையை கர்நாடகத்தில் அமைப்பது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச மாநில அரசு இரண்டு மூத்த அதிகாரிகளை நியமித்தது.
இந்தக் குழுவினர், டாடா நிறுவனத்தின் ரவிகாந்த் தலைமையிலான குழுவுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். டாடா குழு மீண்டும் திங்கள்கிழமை பெங்களூர் வந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
ரத்தன் டாடாவையும் பெங்களூருக்கு வருமாறும், பேச்சுவார்த்தை நடத்தலாம் என முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் அதி வேகமான நடவடிக்கை காரணமாக டாடா நிறுவனத்தின் நானோ தொழிற்சாலை கர்நாடகத்தில் அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications