யு.எஸ். ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து அமெரிக்கா இந்த ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது. மிரம்ஷா என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அக்கிராமத்தில் உள்ள ஒரு வீட்டைக் குறி வைத்து ஏவுகணை வீசப்பட்டது. இதில் இரு பெண்கள், ஒரு குழந்தை உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அக்தர் அப்பாஸ் கூறுகையில், நேடோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications