எங்களுடனும் யு.எஸ். அணு ஒப்பந்தம் செய்ய வேண்டும்: கிலானி
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போல பாகிஸ்தானுடனும், அமெரிக்க அரசு, அணு சக்தி ஒப்பந்தத்ைத மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முல்தான் நகரில் செய்தியாளர்களிடம் கிலானி பேசுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா செய்து கொண்டதைப் போன்ற சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் ஆர்வத்துடன் உள்ளது.
இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போலவே எங்களுடனும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வர வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளது. அதன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் கட்டுக்கோப்புடன் தனது நிலையில் தொடர்ந்து இருக்கும்.
பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் யாரும் வெற்றி பெற முடியாது. பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் (குறிப்பாக ஓபாமா பாகிஸ்தானுக்கு கடும் எதிர்ப்பாக பிரசாரம் செய்து வருகிறார்) தாங்கள் வெற்றி பெற எதையாவது பேசி வருவார்கள். அதை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பாக நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. யார் அதிபராக வந்தாலும் அமெரிக்காவுடன், பாகிஸ்தானின் நல்லுறவு தொடரும்.
பாதுகாப்பு, உளவு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இது எதிர்காலத்திலும் நீடிக்கும் என்றார் கிலானி.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications