மதுரை கலெக்டர் காரை முற்றுகையிட்ட விவசாயிகள்
மதுரை: கோயில் நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கே அந்த நிலத்தை வழங்க கோரி மதுரையில் கலெக்டர் காரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட தலைவர் போஸ், செயலாளர் தேவதாஸ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருபவர்களுக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து தர வேண்டும், மேலும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்கள் குறித்து மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஐந்து பேர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று கூறினர். இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள் கலெக்டரின் காரை முற்றுகையிட்டு திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகளும் போலீஸாரும் அவர்களை சமரசம் செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டரை சந்தித்து அவரிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications