நிதி நெருக்கடி: குடும்பத்தைக் கொன்று இந்தியர் தற்கொலை
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் வசித்து வந்த கார்த்திக் ராமானுஜம் என்கிற எம்.பி.ஏ பட்டதாரி, நிதிப் பிரச்சினை காரணமாக தனது மனைவி, மாமியார், குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ராமானுஜம். இவர் தனது மனைவி, இரு குழந்ைதகள் மற்றும் மாமியாருடன் லாஸ் ஏஞ்செலஸில் வசித்து வந்தார்.
எம்.பி.ஏ. படித்துள்ள கார்த்திக் பல மாதங்களாக வேலையில்லாமல் இருந்து வந்தார். இதனால் குடும்பத்தை நடத்துவது பெரும் சிரமமாக மாறியது. வேலையும் இல்லாமல், குடும்பத்தையும் நடத்த முடியாமல் போனதால் பெரும் விரக்தி அடைந்த அவர் திங்கள்கிழமை இரவு கோபத்தில், தனது மனைவி, மாமியார், இரு குழந்தைளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னும் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த நாள் காலையில் அவரது வீடு திறந்த நிலையில் இருந்ததைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸுக்குத்தகவல் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது ஐந்து பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கார்த்திக் ராமானுஜம் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நிதிப் பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதும் பெரும் நிதிப் பிரச்சினை தாண்டவமாடி வரும் நிலையில், நிதிப் பிரச்சினை காரணமாக குடும்பத்தைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications