காஷ்மீரின் முதல் ரயிலை தொடங்கி வைக்கிறார் மன்மோகன் சிங்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ள பட்காம் - நெளவ்காம் இடையிலான ரயிலை பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
மத்திய காஷ்மீரையும், ஸ்ரீநகரையும் இந்த ரயில் இணைக்கிறது. இந்த ரயிலின் தொடக்க விழாவுக்காக 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குப் பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை பயணம் செய்கிறார்.
பட்காம் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மிக குறுகிய தொலைவிலான ரயிலாக இருந்தாலும் கூட இதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக ரீதியிலான பயணம் தொடங்க சற்று நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவிழாவில் இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்த சில முக்கிய அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிடுவார் எனத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை உதம்பூருக்கு பிரதமர் வருகிறார்.அங்கு 450 மெகாவாட் பாக்லிகார் மின் உற்பத்தித் திட்டத்ைத அவர் தொடங்கி வைக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் தொடங்கி வைக்கும் 2வது மின் திட்டம் இது. கடந்த ஏப்ரல் மாதம் தல் ஹஸ்தி மின் திட்டத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications