பெரா விதிமீறல் வழக்கிலிருந்து சந்திராசுவாமி விடுதலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்ச்சை சாமியார் சந்திராசுவாமி அன்னியச் செலாவணி சட்ட மீறல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சை சாமியார் சந்திராசுவாமி மீது பொருளாதார குற்றத் தடுப்பு இயக்குநரகம், கடந்த 1998ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு 10 முறை சம்மன் அனுப்பியும், சந்திராசுவாமி ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் சந்திராசுவாமி மீது 2006ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கூடுதல் முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட், குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராஜேந்திர குமார் சாஸ்திரி, இவ்வழக்கிலிருந்து சந்திராசுவாமியை விடுவித்து நேற்று உத்தரவிட்டார்.
இதுதவிர மேலும் 9 வழக்குகள் இதே கோர்ட்டில் சந்திராசுவாமி மீது நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications