கடத்தப்பட்ட சிவபாலனுடன் என்.கே.கே.பி. ராஜா பேசிய பேச்சு லீக் ஆனது

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி-மலர்விழி, அவர்களது மகன் சிவபாலன், பழனிச்சாமியின் குகமணி ஆகியோர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் பழனிச்சாமி, மலர்விழி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, அமைச்சர் ராஜாவின் தூண்டுதலின்பேரில் அவரது ஆட்கள் தங்களை கடத்தியதாக தெரிவித்தனர்.
மேலும் கடத்தப்பட்ட சிவபாலன் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். சொத்து அபகரிப்புக்காக கடத்தப்பட்டதாக நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் புகார் செய்தனர்.
இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததில் ராஜா அமைச்சர் பதவியை இழுந்தார். இது தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை சூடுபிடித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கடத்தப்பட்ட சிவபாலன் இன்னும் ராஜாவின் ஆட்களின் பிடியில் இருப்பதாக குகமணியின் மைத்துனர் சுப்பிரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஒரு சிடி ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிவபாலனுடன், ராஜா உரையாடுவது இடம் பெற்றுள்ளது.
அந்த உரையாடல் விவரம் இதோ...
ராஜா: நான் ராஜா மாமா பேசுகிறேன். உனக்கு என்ன வேணும்
சிவபாலன்: நீங்க கொடுப்பது எனக்கு போதும். எங்க அம்மாதான் 6 ஏக்கர் கேட்கிறாங்க
ராஜா: ஏண்டா உங்க இடத்தை மட்டும் கேட்கிறீங்களா, இல்லை கிறிஸ்தவர்களுக்கான இடத்தையும் சேர்த்து கேட்கிறீங்களா, மற்றதை நேரில் பேசிக்கலாம்.
என்று இந்த உரையாடல் முடிகிறது. இதேபோல காஞ்சிகோவில் சின்னப்பன் என்பவர், சிவபாலனிடம் பேசும்போது, நம்ம டீலிங் விஷயம் நாலு பேரை தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம் என்கிறார்.
இந்த சிடி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications