சமாதானத்தை சீர்குலைப்போர் மீது நடவடிக்கை: விஜயகாந்த்
சென்னை: சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சர்ச் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சமீப காலமாக தேவாலயங்கள் சேதப்படுத்தப்படுவதும், கிறிஸ்தவ மக்கள் தாக்கப்படுவதும் இதுவரையில் இல்லாத அதே நேரத்தில் கண்டிக்கத்தக்க செயலாகும். இவற்றை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினரும் நடுநிலையோடு இயங்க வேண்டியது அவசியம். அரசியல் தலையீடு காரணமாக காலம் தாழ்த்துவதோ அப்பாவி மக்கள் மீது வழக்குப் போடுவதோ கூடாது.
மாநிலத்தில் எந்தெந்த பகுதிகளில் வகுப்பு கலவரங்களுக்கான சாத்திய கூறுகள் உள்ளன என்பது கடந்த கால நிகழ்ச்சிகளில் இருந்து அரசுக்கு தெரியும். அத்தகைய இடங்களில் கோவில்கள், மசுதிகள், தேவாலயங்கள் என்று எதுவானாலும் அரசு முன் கூட்டியே பாதுகாப்பு அளித்திருந்தால் இத்தகைய சம்பவங்களை தடுத்திருக்க முடியும்.
மதம் என்பது அவரவர் நம்பிக்கைய பொறுத்தது. அனைவரும் சமாதானமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவது அரசின் கடமை. எல்லோரும் இந்தியர்கள் என்பது வெறும் முழக்கமாக இருக்கக் கூடாது.
அனைவரும் சட்டத்தின் முன் சமமாம நடத்தப்படவும், எந்த சாராரும் புறக்கணிக்கப்படவில்லை என்ற உணர்வு பெற சமவாய்ப்பு அளித்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டும் பன்மை சமுதாயமாக இயங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications