முக்கிய தலிபான் தளம் அழிப்பு, 20 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வடமேற்கு எல்லையில் இருந்த தலிபான் தீவிரவாதிகளின் முக்கிய தளத்தை அழித்த்து பாகிஸ்தான் அதிரடிப் படை. இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகாரம் செலுத்தி வந்த தலிபான்கள், அங்கிருந்து அமெரிக்கப் படைகளால் விரட்டப்பட்ட பிறகு, எல்லை நாடான பாகிஸ்தானில் புகுந்து கொண்டு, அவ்வப்போது தீவிரவாதச் செயல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
குறிப்பாக வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள பியோசார், ஷவார் மற்றும் லண்டாய்சார் போன்ற பகுதிகள் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்துதான் தங்கள் மொத்த நெட்வொர்க்கையும் தலிபான்கள் இயக்குவதாகக் கூறப்படுகிறது.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடந்த தாக்குதலில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுகளை வீசி இந்த தாக்குதலை பாகிஸ்தான் அதிரடிப் படை நடத்தியது.
இந்த தாக்குதலையும், தங்கள் தரப்பு உயிரிழப்புகளையும் ஒப்புக் கொண்டுள்ளது தலிபான் அமைப்பு.
இது தொடர்பாக அதிபர் சர்தாரி கூறுகையில், இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றும், பாகிஸ்தானை தீவிரவாதமில்லாத நாடக மாற்றுவதே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தலிபான்களாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தீவிரவாதத்தை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து நேற்றுதான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடந்தது. இதன் எதிரொலியாகவே, தலிபான்களுக்கு எதிரான இந்த அதிரடித் தாக்குதலை தொடங்கியுள்ளது ராணுவம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications