திருப்பதி பிரம்மோற்சவம்: ரூ.15.79 கோடி வருவாய்!
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழா மூலம் கோவிலுக்கு ரூ.15.79 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு வருமானத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலும் இருந்து திருப்பதியில் குவிந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் காணிக்கையை தவிர மற்ற துறைகளும் கணிசமான லாபத்தை பெற்றுள்ளன. பக்தர்களுக்கு போக்குவரத்து வழங்கிய ஆந்திர போக்குவரத்து கழகம் மட்டும் இந்த உற்சவத்தின் மூலம் 9.66 லட்சம் ரூபாய் லாபம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின்போது ரூ.11.10 கோடி வருவானம் கிடைத்து. இந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ.15.79 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு வருமானத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பிரம்மோற்சவத்தின்போது வழங்கப்பட்டதாக தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications