தொழிற்சாலைகளுக்கு டீசல் மீதான வாட் வரி வாபஸ்: கருணாநிதி

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை:
மாலை நேரங்களில் 6 மணி முதல் 10 மணி வரை வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வகை செய்யும் வகையில் இந்த நேரங்களில் பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அண்மையில் ஆணையிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பெருந்தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிக்காத வகையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்கள் வைத்துள்ள ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய ஏதுவாக தேவையான டீசல் வழங்குவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
முதல்வர் கருணாநிதி இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிதினார். இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்குத் தேவையான கூடுதல் டீசலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வழங்க மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த டீசல் மதிப்புக் கூட்டு வரியும் சேர்த்து லிட்டர் ஒன்றுக்கு சுமார் ரூ.50 என்றுள்ளது. தற்போது பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 37.13 என்று உள்ளது.
ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக விலை டீசலைப் பயன்படுத்தும் பெரிய தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இந்த டீசலின் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் திருப்பியளிக்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications