சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு முக்கியமான வடகிழக்கு பருவ மழை இன்னும் தொடங்கவில்லை. எனினும், கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கு நல்ல மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவில் கனமழையாக வெளுத்து வாங்கியது. மாநகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த மழை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நகரின் சிற்சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்றிரவு முதல் பெய்து வரும் மழைக்கு வடகிழக்கு பருவ மழை காரணம் அல்ல என்றும் தென்மேற்கு பருவ மழையே பெய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications