ஆந்திராவில் வன்முறை: 6 பேர் உயிருடன் எரித்து கொலை

ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பைன்ஸா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை துர்கா சிலை ஊர்வலம் நடந்தது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. அதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
பதட்டம் தொடர்ந்ததை அடுத்து பைன்ஸா நகரிலும் அதன் சுற்றுபுற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பைன்ஸா நகருக்கு 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடோலி கிராமத்துக்குள் கலவர கும்பல் புகுந்து வன்முறைய கட்டவிழ்த்தது. கிராமத்தில் இருந்த சில வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்தர மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெயின்ஸா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கலவரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் ஜன ரெட்டி, டிஜிபி எஸ்எஸ்ஜி யாதவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications