கூட்டுவதற்கு முன்பே தோற்ற அனைத்துக் கட்சி கூட்டம்! - சு.சாமி கிண்டல்
சென்னை: தமிழகத்தில் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளின் கூட்டமாகவே தற்போது திமுக மாறியுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் கூடுவதற்கு முன்னதாகவே தோல்வி அடைந்துவிட்டது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணி சாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க முதல்வர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளின் கூடாரமாகவே தற்போது திமுக மாறியுள்ளது என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது முற்றிலும் உண்மைதான்.
எனவே, முதல்வர் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே தோல்வி அடைந்து விட்டது.
இலங்கை பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தயாராக இல்லை என்பதால் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அவர்களது உறுதியற்ற தன்மையை பிரதிபலிப்பதாகவே அமையும்.
அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வெளிநாட்டு தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மக்களின் பணம் வீணாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் சாமி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications