ராமர் பாலம் வழிபாட்டுத் தலமல்ல-மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

Adam Bridge
டெல்லி: சீதையை ராவணனிடம் இருந்து மீட்டு வந்தபோது ராமர் பாலத்தை ராமரே வில்லை விட்டு சிதறடித்துவிட்டார். அந்தப் பாலம் வழிபாட்டுக்குறிய இடமே இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து பாஜக, இந்து அமைப்புகள், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு புதிதாக 100 பக்கம் கொண்ட அபிடவிட்டை தாக்கல் செய்துள்ளது. கடந்த 11ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பதில் மனுவில்,

இந்துயிசத்துக்குள் ராமர் பாலமே வராது. அது வழிபாட்டுக்குறிய இடமே இல்லை. அந்தப் பாலமே இப்போது இல்லை. சீதையை ராவணனிடம் இருந்து மீட்டு வந்தபோது அதை ராமரே வில்லால் சிதறடித்துவிட்டார்.

இதை தமிழ்க் காவியமான கம்ப ராமாயாணம் மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்-இலங்கையின் மன்னாருக்கு இடையே லைம்ஸ்டோன் பாறைத் திட்டுக்களால் ஆன இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 48 கி.மீ ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+