இந்துக்களுக்கு கருணாநிதி துரோகம்-இ.முன்னணி
சென்னை: கிருஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்த கருணாநிதி தொடர்ந்து இந்து சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து வருகிறார் என்று இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தனர். கடந்த ஆண்டு திமுக அரசு அரசியல் சாசனத்திற்கு விரோதமாக கிருஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து தலா 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்தது.
பிற்பட்ட வகுப்பினரில் உள்ள கிருஸ்தவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலத்தை பயன்படுத்தி 148 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சேர வேண்டிய வேலைவாய்ப்புகளை தட்டிப் பறித்து அனுபவித்து வந்தனர்.
தற்போது தனி இடஒதுக்கீடு செய்தவுடன் மற்ற சமுதாயத்தினரின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், கிருஸ்தவர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று கருணாநிதி கிருஸ்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளார்.
கருணாநிதி தொடர்ந்து இந்து சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து வருகிறார். கிருஸ்தவர்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்த கருணாநிதி, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டையும் ரத்து செய்யாதது ஏன்?
இடஒதுக்கீடு பிரச்சனையில் அரசியல்வாதிகள் மைனாரிட்டி ஓட்டுக்காக இந்து சமுதாயத்தை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் இதனை சரியாக புரிந்து கொண்டு அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். என்று கூறியுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications