மத்திய அரசு துரோகம்-கருணாநிதி பொறுப்பாளி: வைகோ

அவர் வெளியிட்ட அறிக்கையி்ல கூறியிருப்பதாவது:
ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்திய அரசு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவி செய்து வருகிறது. தமிழகத்தில் திரட்டப்பட்ட உணவு, மருந்தைக் கூட செஞ்சிலுவை சங்கம் மூலம் விநியோகிக்க இந்திய அரசு அனுமதி மறுத்தது.
இலங்கையில் நடக்கும் தமிழினக் படுகொலையில் இந்திய அரசுக்கும் பங்கு உண்டு அந்த அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் முழு பங்கு உண்டு.
இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் கூடாது என்று மத்திய அரசுக்கு கருணாநிதி ஏன் சொல்லவில்லை? இலங்கை விமானப்படைக்கு இந்தியா ராடார் கருவிகளை கொடுத்த துரோகத்துக்கு திமுக உடந்தைதானே?
இந்தியா-இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டதை கருணாநிதி ஏன் எதிர்க்கவில்லை? இலங்கைக்கு இந்தி அரசு வட்டியில்லா கடனாக ரூ.500 கோடியை கொடுத்ததன் மூலம் பாகிஸ்தான், சீனாவில் ஆயுதங்களை வாங்க உதவியது துரோகம்தானே?
அதை ஏன் கருணாநிதி கண்டிக்கவில்லை? இலங்கை ராணுவத்துக்கும் விமானப்படைக்கும் பயிற்சி கொடுத்ததற்கும் திமுக உடந்தைதானே?
இலங்கைக்கு படையை அனுப்பலாமா என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு பதிலளித்த பிரதமர், இலங்கையில் ஒருமைப்பாட்டை காக்க இந்தியா ராணுவ உதவி செய்துள்ளது என்று ஒப்புக் கொண்டார்.
இந்திய அரசின் துரோம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த துரோகத்துக்கு தமிழக முதல்வரும் பொறுப்பாளி. பழியில் இருந்து தப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் என்று நாடகம் நடத்துகிறார். மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications