நிதி நெருக்கடி: ஏர் இந்தியாவுக்கு ரூ.2500 கோடி 'உதவி'!

ஏர் இந்தியாவின் விமான சேவைக்கும் கூடுதல் விமானங்கள் வாங்குவதற்கும் ரூ.40,000 கோடி தேவைப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு வெறும் ரூ. 145 கோடி தான்!. இந்தத் தொகையை வைத்துக் கொண்டு புதிதாக எந்த சேவையையும் தொடங்க முடியாத நிலை.
எனவே ஏர் இந்தியாவின் நிதி நெருக்கடியைத் தீர்க்க அவசர கால நிதியாக ரூ.2,500 கோடியை மத்திய அரசு வழங்குவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் இன்று அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடக்கும் விமானக் கண்காட்சியில் பங்கேற்ற பிறகு அவர் கூறியதாவது:
77 ஆண்டுகளாக நாட்டின் பிரதான விமான சேவை நிறுவனமாகத் திகழும் ஏர் இந்தியாவின் ரொக்க இருப்பை அதிகரிப்பது இன்று அவசியம். பங்கு முதலீடு, குறுகிய காலக் கடன்கள் மூலம் இப்போதைக்கு ரூ.2500 கோடி வழங்கப்படும்.
மற்ற போட்டி விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பயணிகள் வருகை குறைவு மற்றும் வருமானக் குறைவு ஏர் இந்தியாவுக்கும் ஏற்பட்டுள்ளது நிஜம்தான்.
மற்றபடி ஏர் இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டில் இறங்கப் போவதாகக் கூறப்படுவது குறித்து இப்போது ஒன்றும் சொல்ல முடியாது என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications