பணி நீக்கம்-ஜெட்டுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை
மும்பை: நீக்கப்பட்ட ஊழியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் மும்பையில் இருந்து அந்த நிறுவனத்தின் ஒரு விமானத்தைக் கூட இயங்க விடாமல் தடுப்போம் என மகாராஷ்டிர நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் இன்று மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நீக்கம் தொடர்பாக பலருக்கு கடிதம் கூடத் தரப்படவில்லை. வாய்மொழியாகவே வேலையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல ஊழியர்களுக்கு உறுதியளித்தபடி 30 நாள் ஊதியம் கூடத் தராமல் பணி நீக்க கடிதங்கள் தரப்பட்டுள்ளன.
அமைச்சர் நழுவல்:
இது தொடர்பாக விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் தலையிட்டு தங்களுக்கு நியாயம் கிடைக்க வகை செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரியுள்ளனர்.
ஆனால், ஊழியர்களை நிறுவனம் பணி நீக்கும் விஷயத்தில் தான் தலையிட முடியாது என படேல் கூறிவிட்டார்.
அவர் கூறுகையில், விமான நிறுவனங்கள் எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்குமாறு கேட்டு கேட்டு சலித்துவிட்டன. ஆனால், நிதியமைச்சகமும் பெட்ரோலிய அமைச்சகமும் அதை ஏற்காததால் தான் விமானத்துறைக்கு இவ்வளவு நஷ்டமும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது என ப.சிதம்பரம் மற்றும் முரளி தியோரா மீதான தனது எரிச்சலை பிரபுல் படேல் வெளிப்படுத்தினார்.
ஜெட்டுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை:
இதையடுத்து இந்த விவகாரத்தை மகாராஷ்டிர நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே வசம் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.
இதையடுத்து ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்காவிட்டால் ஜெட் ஏர்வேசின் எந்த விமானமும் புறப்பட முடியாது என ராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் ஜெட் ஏர்வேஸ் பிடிவாதம் பிடிக்காமல் மீண்டும் ஊழியர்களை பணியில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மும்பையிலிருந்து ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானமும் கிளம்ப முடியாது. விரைவில் ஜெட் நிறுவன அதிகாரிகளை சந்தித்துப் பேசுவேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications