மின் துறையை தனியார்மயமாக்க முயற்சி: சிபிஎம்
திண்டுக்கல்: தமிழக மின் துறையை தனியார் மயமாக்க முயற்சி நடைபெற்று வருவதாக சிபிஎம் எம்எல்ஏ பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
மின் வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திண்டுக்கல் தலைமை மின்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, பாலபாரதி எம்எல்ஏ பேசியதாவது
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றபோது மின்வெட்டு சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்றார்.
அதன்பிறகு 3 மாதம் கழித்து ஒரு மணி நேரம் மின்வெட்டு என அரசு அறிவித்தது. அதன்பிறகு 2 மணிநேரமாக அது உயர்ந்தது. இப்போது அரசு ஆறரை மணி நேரம் மின்வெட்டை அறிவித்துள்ளது.
அரசு அறிவித்த இந்த ஆறரை மணி நேர மின்வெட்டு மக்கள் மத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் நகரில் கூடுதலாக அறிவிக்கப்படாத 5 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேர மின்வெட்டால் திண்டுக்கல் நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த மின்வெட்டின் காரணமாக மாணவர்கள், மருத்துவமனை, வர்த்தகர்கள், வங்கி என்று பாதிப்புகளால் மக்கள் அவதி்பட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது தமிழக அரசு மின் துறையை இரண்டாக பிரித்து உள்ளது.
மின்துறையை தனியார் மயமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகளை மாநில அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை, போக்க மத்திய அரசிடம் கூடுதலாக மின்சாரத்தை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications