அகதி முகாம்: பாரதிராஜாவுக்கு அனுமதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குள் செல்ல இயக்குனர் பாரதிராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் வரும் 19ம் தேதி ராமேஸ்வரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர்கள் நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.

பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ள இடங்களை பார்வையிட்ட அந்த குழு, மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு சென்றனர். அங்கு தங்கியுள்ள இலங்கை அகதிகளை சந்தித்து குறைக்கேட்பதற்காக நன்பகல் 12 மணிக்கு வந்தனர்.

அகதிகளை சந்தித்து பேச வேண்டும் என்று தனி கலெக்டர் அருணாசலத்தை சந்தித்து அனுமதி கேட்டனர். சென்னையில் உள்ள அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்று கூறி அனுமதி தர மறுத்துவிட்டார்.

இதையடுத்து அகதிகளை சந்திக்க முடியாமல் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர் குழுவினர் திரும்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+