அணைகள் நிரம்பின-குற்றாலத்தில் வெள்ளம்!
நெல்லை: கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தென் மாவட்டங்களில் அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. குற்றால அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இடி மின்னலுடன் விடிய விடிய பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல இடங்களில் குளங்கள் நிரம்பி, உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றாலம், ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடவி நயினார், கருப்பாநதி அணை, பாபநாசம், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குண்டாறு, கருப்பாநதி, மேட்டை நீர்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன.
செங்கோட்டை, புளியரை, கற்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டது தெரியாமல் தென்காசி கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.
பின்னர் அவசர அவசரமாக மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர். கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் நனைத்தபடியே வீடு திரும்பினர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications