உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஊர்வலம்
சென்னை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11 மணியளவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மன்றோ சிலையில் இருந்து அரசினர் தோட்டம் வரை ஊர்வலம் சென்றனர். இதில் இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பேரணிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமை தாங்கினார். பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்ட நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் முடிவில் ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
இந்தப் போராட்டம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய புறக்கணிப்பு காரணமாக உயர்நீதிமன்றத்தில் பணிகள் முற்றிலுமாக முடங்கின.
நாளை உண்ணாவிரதம்:
போராட்டத்தின் 2ம் நாளான நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பை வழக்கறிஞர்கள் மேற்கொள்வதுடன் உண்ணாவிரதமும் கடைப்பிடிக்க உள்ளனர்.
இதேபோல தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதி மன்ற வக்கீல்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications