உயர் ஜாதி ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு-மாயாவதி
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் உயர் ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜாதி செல்வாக்கு உள்ளவர்களுக்கே தேர்தல்களில் போட்டியிட சீட் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
உயர் ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
உயர் ஜாதியில் உள்ள ஏழைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. இந்த ஜாதி இளைஞர்கள் வேலையில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், உயர் ஜாதி ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் பகுஜன் சமாஜ் கட்சியின் மற்ற பிரிவினருடன், குறிப்பாக உயர் ஜாதி ஏழைகள், இளைஞர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
அனைத்து ஜாதி ஏழைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாட்டில் புரட்சியை உருவாக்க முடியும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார்.
எங்கள் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க உயர் ஜாதியினர் ஆதரவு அளிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலின்போது, தங்கள் ஜாதியினரின் ஆதரவை முழுமையாக பெறும் தகுதியுள்ளவர்களுக்கே சீட் தருவேன்.
சீட் கேட்பவருக்கு தன் சொந்த சமூகத்தினரிடையே செல்வாக்கு உள்ளதா, அவர்களின் வாக்குகளை சிதறாமல் பெற முடியுமா என்பதை மதிப்பீடு செய்யப்படும். அப்படிப்பட்டவர்களுக்கே சீட் தரப்படும். அப்போது அவர்கள் எளிதில் வெற்றி பெறுவதோடு, பகுஜன் சமாஜ் கட்சியின் ஓட்டு வங்கியும் வீணாகாது என்றார் மாயாவதி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications