அதிமுக-மதிமுக கூட்டணி பலமாக உள்ளது: வைகோ
நெல்லை: அதிமுக-மதிமுக கூட்டணியை பிரிக்க கருணாநிதி பல்வேறு திட்டங்களை தீட்டினார். அவரது முயற்சி பலிக்கவில்லை. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது என்று என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழா நடந்தது. நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை வகித்தார்.
இதில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:
மாமன்னன் புலித்தேவன் பிறந்தநாள் விழா இங்கு மாநாடு போல் நடக்கிறது. இன்றைக்கு அரசியல் பொது எதிரிக்கு எதிராக கட்சிகள் கூட்டணி அமைப்பது போல, சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையருக்கு எதிராக பாளையக்காரர்களுடன் கூட்டணி அமைத்து பூலித்தேவன் போரிட்டார்.
ஆனால், சூழ்ச்சியாலும், துரோகத்தாலும் போரில் வீழ்த்தப்பட்டார். எனினும், தனது வாழ்நாளில் அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்தார். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
இன்றைய இளைஞர்களும் அத்தகைய தலைவர்களின் கொள்கையைப் பின்பற்றி லட்சியங்களுடன் வாழ வேண்டும். சமூக ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
எங்களை பிரிக்க முயற்சி:
பின்னர் காரியாபட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:
அதிமுக-மதிமுக கூட்டணியை பிரிக்க பல்வேறு திட்டங்களை கருணாநிதி தீட்டினார். அவரது முயற்சி பலிக்கவில்லை.
காலம் மாறி வருகிறது. இப்போது கறுப்பர் இனத்தை சேர்ந்த பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடுகிறார். அவருடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அது போல் தமிழகத்தில் சமுதாய மாற்றம் ஏற்படும் காலம் நெருங்கிவிட்டது.
நாட்டு நலனுக்கு இளைஞர்கள் பாடுபட முன்வர வேண்டும். இலங்கையில் நடப்பது உரிமைப் போரட்டம். இளைஞர்கள் உரிமைப் போராட்டத்திற்கு கைகொடுக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றார்.
புலிகளை தோற்கடிக்க முடியாது:
இதைத் தொடர்ந்து கோவில்பட்டியில் வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை செய்யும் கடையை திறந்து வைத்த அவர் பேசியதாவது:
ராஜபக்சே ராணுவம், இலங்கைத் தமிழர்களை அழித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அரசு அமைதியாக இருந்ததால்தான், இப்போது இலங்கை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அங்கு நடக்கும் சண்டையில் ராணுவத்தால், புலிகளை தோற்கடிக்க முடியாது. தமிழர்களை அழிக்க, அந்நாட்டிற்கு ராணுவத்திற்கு ரேடார் உள்ளிட்டவற்றை உதவிகளை வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் துரோகமிழைத்து விட்டார்.
அதிமுக-மதிமுக, கூட்டணி வலுவாகவுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications