ஆள் கடத்தல் வழக்கு: பாஜக எம்.பி டிஸ்மிஸ்
டெல்லி: கடந்த ஆண்டு மனைவி, மகன் என்ற பெயரில் ஒரு பெண்ணையும், சிறுவனையும் வெளிநாட்டுக்கு மோசடியாக அழைத்துச் செல்ல முயன்று கைதான பாஜக எம்.பி. பாபபாய் கத்தாரா, எம்.பி. பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் தஹோத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாபு பாய் கத்தாரா.
கடந்த ஆண்டு தனது மனைவி, மகன் ஆகியோரது பாஸ்போர்ட்களில் வேறு இருவரை மோசடியாக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று கைதானார்.
இதுகுறித்து விசாரிக்க கிஷோர் சந்திர தியோ தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பாபு பாய் கத்தாரா குற்றம் புரிந்தது நிருபணமாகியுள்ளதாகவும், எனவே அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரை அறிக்கை நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை அவை முன்னவரான வெளியுறவு அமைச்சர் பிரணாரப் முகர்ஜி கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், ஒட்டுமொத்த உறுப்பினர்களின் மரியாதையையும் பாபு பாய் கத்தாராவின் செயல் சீர்குலைத்து விட்டது. எனவே அவர் அவையிலிருந்து நீக்கப்படுகிறார் என்று கூறினார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து பாபு பாய் கத்தாரா உறுப்பினர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications