திமுகவின் தியாக மனப்பான்மைம்-பாஜக கிண்டல்
திண்டுக்கல்: காலாவதியான பதவியை தியாகம் செய்யும் மனப்பான்மை திமுகவிற்கு மட்டுமே உண்டு என்று பாஜக முன்னாள் மாநி்லத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கிண்டலடித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இதில் பாஜகவும் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும்.
தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது.
இலங்கையில் ஈழ தமிழர்களின் போராட்டம் பின்னடைவுக்கு விடுதலைப் புலிகளே காரணம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசிச போக்கு தான் இந்த அபாய நிலைக்கு காரணம்.
மேலும், அமிர்தலிங்கம், பிரமேதாசா, முகுந்தன், போன்றவர்களின் மரணத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரை இந்திய அரசு உடனே மாற்ற வேண்டும். அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை மதித்து புரிந்து கொள்ளும் ஒரு தமிழரை தூதராக நியமிக்க வேண்டும்.
இந்திய அமைதிப் படையை அங்கு அனுப்பி இலங்கையில் அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும்.
காலாவதியான எம்பி பதவியை தியாகம் செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட 'தியாக' மனப்பான்மை திமுகவுக்கு மட்டுமே உண்டு என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications