கற்பழித்து கொலை: 2 குடும்பத்தினருக்கு நிதியுதவி
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட இரு பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதிவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை அரடாப்பட்டு கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம், ஆதிதிராவிட காலனியைச் சேர்ந்த எட்டியான் மகள் ராஜேஸ்வரி (17) தனபால் மகள் பூங்காவனம் (18) கும்பளாப்பட்டு ஏரி அருகில் உள்ள கிணற்றில் துணி துவைக்கச் சென்றுள்ளனர்.
கிணற்றருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியின் ஓட்டுனரால் இவர்கள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.
இந்த பெண்களின் குடும்ப வறுமையைக் கண்டு, நிதியுதவி வழங்க திருவண்ணாமலை கலெக்டர் பரிந்துரைத்தார்.
இறந்துபோன ராஜேஸ்வரி, பூங்காவனம் ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications