சினிமா ஆசை..எல்லை தாண்டிய பாக் சிறுவன் கைது
இஸ்லாமாபாத்: சினிமா ஆசையால் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டு சிறுவன் கைது செய்யப்பட்டான்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவன் நசீர் சுல்தான். அங்கு பத்தாவது வகுப்பு படித்து வருகிறான். இவனுக்கு ஷாருக் கான் என்றால் உயிர். ஷாருக் கான் மீது கொண்ட வெறித்தனமான அன்பினால், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசை துளிர் விட்டது சுல்தானுக்கு.
இந்த ஆசை வேகமாக வளர்ந்து எல்லை கடந்து இந்தியாவுக்கு செல்ல தூண்டி விட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி தனது சொந்த மாநிலமான வட மேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து கிளம்பிய நசீர் சுல்தான், திருட்டுத்தனமாக இந்தியாவின் பஞ்சாபுக்குள் வந்து விட்டான்.
பள்ளிக்கூட சீருடை, பள்ளிப் பையுடடனேயே பஞ்சாபுக்கு சுல்தான் வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுல்தானின் தந்தை சுல்தான் சரீன் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கிறார். பஞ்சாப் வந்து சேர்ந்த சுல்தான், 2 நாட்கள் கழித்து தந்தைக்கு போன் செய்து தான் பஞ்சாப் வந்த விவரத்தை தெரிவித்தான். மும்பைக்குப் போகப் போவதாகவும் கூறினான்.
அடுத்த கால் மணி நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி போன் அவர்களுக்கு வந்தது. அதில் வந்த செய்தி என்னவென்றால் உங்களது மகன் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளான் என்பது.
தற்போது பரீத்கோட் சிறையில் சுல்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பெற்றோர், தங்களது மகனின் விடுதலைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். சுல்தான், வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சுக்யாதான் என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவன். இவனது பெற்றோர் வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சரீன் இதுகுறித்து கூறுகையில், எனக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்திய அரசு எனது மகனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தனது மனைவி மிகுந்த மன உளைச்சலில் சிக்கி பெரும் கவலையில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications