தமிழகத்தில் கன மழைக்கு இதுவரை 13 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பல அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், ஏரிகளில் உடைப்பெடுத்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் விலகாமல் தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது.
தொடர் மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பல ஏரிகள், குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. சில அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் கன்னியாகுமரி, நாமக்கல், தூத்துக்குடி, சேலம், தேனி மாவட்டங்களில் தலா ஒருவர் என ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி விட்டன. பல கண்மாய்கள் உடைப்பெடுத்துள்ளன.
மேலூர் அருகே உள்ள உப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நத்தம், துவரங்குறிச்சி வழியாக பஸ்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டு வருகின்றன.
வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கையில் உள்ள கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அங்கு மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் விழுந்துள்ளன. எனவே 25ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள அணை தொடர் மழையால் நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் கூடுதல் நீர் அப்படியே பெண்ணையாற்றில் திறந்து விடப்படுகிறது.
அணையிலிருந்து நீர் அதிகம் வருவதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென் பெண்ணையாற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications