பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் எப்போதும தேசியத்தின் பக்கம் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன். மொகலாயர் காலத்திலும் சரி, ஆங்கிலேயர் காலத்திலும் சரி, தமிழகம் தனது பங்கை செய்துள்ளது. அகிம்சை முறையானாலும், ஆயுதம் ஏந்திய போராட்டமாக இருந்தாலும் தமிழகத்தின் பங்கு அளப்பரியது.
தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தோன்றி, அதிலிருந்து வேறு சில கட்சிகளும் தோன்றிய பிறகு தமிழகத்தில் பிரிவினை கோஷம் எழுந்தது. நாத்திகம், பிரிவினைவாதம் என்னும் இரண்டு தூண்களின் ஆதாரத்தில் எழுந்தது திமுக.
ஆனால் 1967ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இந்த இரு விஷயங்களையும் எழுப்பவேயில்லை. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக பிரிவினைவாதத்தை பகிரங்கமாக கைவிட்டது.
ஆனால், தமிழக மக்கள் மத்தியில் தோற்றுப்போன பிரிவினைவாதத்தை இப்போது மீண்டும் கிளப்ப சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெறப்போவதில்லை.
தமிழகத்தில் உள்ள பெருவாரியான மக்கள் இலங்கையில் இன்னலுறும் தமிழருக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் ஆதரவு கோஷம் எழுப்புபவர்களும், தனித் தமிழ்நாடு கோரிக்கை வைப்பவர்களும் லாபம் பெற முயற்சி செய்வதை அறிந்து தமிழக மக்கள் இந்த பிரச்சனையிலிருந்து பின் விலகுவார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்கள் நலனே. எனவே பிரிவினைவாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள். தமிழக அரசு இத்தகைய பேச்சுக்களை அலட்சியம் செய்யாமல், மெத்தனமாக இல்லாமல் உறுதியுடன் செயல்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications