சென்செக்ஸ் 11% சரிவு.. 9000 புள்ளிகளுக்கு கீழே!

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரியத் தொடங்கிய பிற்பகலில் 1,070 புள்ளிகளை இழந்தது.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியின் குறியீட்டு எண் 359 புள்ளிகளை இழந்தது.
இதனால் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பல லட்சம் கோடிகள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைக்கு ஜான் ஏறினால் மீட்டர் சறுக்குகிறது. கடந்த இரு வாரங்களில் இரண்டு நாட்கள மட்டுமே சென்செக்ஸ் முன்னேற்றத்தைச் சந்தித்தது.
இந் நிலையில் இன்று பங்குச் சந்தை துவங்கியபோதே 274 புள்ளிகள் வீழ்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் இந்த வீழ்ச்சி பெரும் சரிவாக மாறியது. பிற்பகல் 11 மணிக்கு 550 புள்ளிகளுக்கும் அதிகமாக இழந்தது சென்செக்ஸ். 11.30 மணி நிலவரப்படி 9218 புள்ளிகளாக இருந்தது சென்செக்ஸ்.
பின்னர் 700 புள்ளிகளை இழந்து சென்செக்ஸ் 9000 புள்ளிகளுக்குக் கீழே போனது. இதையடுத்து கொஞ்சம் தாக்குப் பிடித்து புள்ளிகள் உயர்ந்தன.
ஆனால், மாலையில் 1070 புள்ளிகள் வரை சரிந்து, 2005ம் ஆண்டுக்குப் பின் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்து. மாலையில் வர்த்தகம் முடிவடைந்தபோது குறியீட்டு எண் 8,701 என்ற நிலையில் இருந்தது. இது நேற்றைய மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீத இழப்பாகும்.
அதே போல நிப்டி 116 புள்ளிகளை இழந்து 2,827 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டிருந்த்து. பின்னர் இந்த இழப்பு 224 புள்ளிகளாக உயர்ந்தது. மாலையில் இழப்பு 359 புள்ளிகனானது. இது நேற்றைய நிலவரத்தை விட 15 சதவீத இழப்பாகும். வர்த்தகம் முடிந்தபோது நிப்டியின் குறியீட்டு எண் 2,584 என்ற நிலையில் இருந்தது.
நிப்டியின் வரலாற்றிலேயே இது இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவாகும். சென்செக்சுக்க இது 3வது மாபெரும் சரிவாகும்.
தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் உஷாராக ஒதுங்கிக் கொண்டனர். புளூசிப் பங்குகளை வாங்குவதிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இன்று ரிசர்வ் வங்கி தனது இடைக்கால நிதிக் கொள்கையை அறிவித்தது. இதனால் பங்குச் சந்தையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications